பொறியியல் வடிவமைப்பு / STEM அடிப்படையிலான பிராஜெக்ட்
அறிமுகம்
பொறியியல் என்ற வார்த்தை பற்றி மாணவர்கள் நன்கு அறிந்திருந்தாலும்கூட, பொறியியல் செயல்முறையை நன்கு பழகிக்கொள்ள, இன்ஜினியரிங் பிராசஸ் என்ற
https://www.youtube.com/watch?v=fxJWin195kU
என்ற இணைப்பில் உள்ள வீடியோவைப் பார்க்கச் செய்யுங்கள். இது செயல்பாட்டுக்கான அவர்களுடைய POA (செயல் திட்டம் - Plan of Action)-னை அமைக்க உதவும்.
பகுதி – 1 - சாய்வுமானியின் வடிவமைப்பும் கடடமைப்பும்
உங்களுடை மாணவர்களிடம் இன்று அவர்கள் அனைவருமே குடிமைப் பொறியாளர்கள் குழு என்றும், ஒரு பள்ளிக் கட்டத்திற்கு அருகில் (அவர்களுடைய பள்ளிக் கட்டிடம் என எடுத்துக் கொள்ளலாம்) ‘Swachh Bharat Abhiyaan” என்ற செய்தியைத் தாங்கிய ஒரு பெரிய விளம்பரப் பதாகையை எழுப்பும்படி அரசு அவர்களை அணுகியுள்ளதாகவும் கூறுங்கள். அருகில் வசிப்பவர்களின் கண்ணில் தெளிவாகத் தெரியும் வகையில் கட்டிடத்திற்கும் மேல் உயரமாக அந்த விளம்பரப் பதாகையை பொறியியலாளர்கள் எழுப்ப வேண்டும். கட்டடிடம், அதன் உச்சியில் உள்ள கொடிக் கம்பம் (ஏதும் இருந்தால்) மற்றும் தண்ணீர்த் தொட்டி உட்பட்டவற்றின உயரத்தை பொறியியாளர்கள் அளிக்க வேண்டும். பிராஜெக்டைச்(Project) செயல்படுத்துவதற்கு முன்னர், அதற்குத் தேவையான பொருத்தமான கருவியை (சாய்வுமானியை) அவர்கள் கட்டமைத்து அதன் துல்லியத்தையும் பரிசோதிக்க வேண்டும்.
- உருவாக்கப்பட்ட குழுக்களில் மாணவர்கள் அமர்ந்து, கொடுக்கப்பட்டுள்ள சூழலை எப்படி அணுகுவது என்று அனைவருடைய கருத்துக்களையும் தொகுக்கும்படி செய்யுங்கள். தங்களுடைய குழுவுக்கு ஒரு பெயரையும் தேர்ந்தெடுக்கும்படியும் கூறுங்கள்.
- செயல்முறையில் அவர்கள் பின்பற்ற திட்டமிட்டுள்ள படிநிலைகளையும் குறிக்கும்படி கூறுங்கள்.
- முழு வகுப்பையும் திரும்ப வகுப்பில் ஒன்றுகூட்டி PPT-வைக் காட்டுங்கள்.
https://www.youtube.com/watch?v=Kd1y5Gobu8I இது, உண்மையான வாழ்க்கைச் சூழல்களில் திரிகோணவியலைப் பயன்படுத்தி அளவிடுவதை விளக்குகிறது. எட்டமுடியாத கட்டமைப்புகளை அளப்பதற்கான பல்வேறு வழிகள் பற்றியும், அதில் முக்கோணவியலையும் சாய்வுமானியையும் பயன்படுத்தி அளப்பது பற்றியும் வேகமாக கலந்துரையாடுங்கள். Take them through the video https://www.youtube.com/watch?v=UQ5Dnt_zwBE
இந்த வீடியோவைக் காட்டி சாய்வுமானி கருவியையும் அது எப்படி உயரங்களை அளப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் அறிமுகம் செய்யுங்கள்.
- தங்களுடைய பணிப்புத்தகங்களில் ஒரு அடிப்படையான சாய்வுமானியின் வடிவமைப்பை வரைவதற்கு நேரம் கொடுங்கள். அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கருத்தை மனதில் கொண்டு அதை மேலும் எப்படி புதுமையாகச் செய்யலாம் என்று பின்னோக்கி வேலை செய்ய வேண்டியதிருக்கும். (தேவை எழுந்தால், நேரமும் இருந்தால், ஒரு சாய்வுமானியை எப்படி கட்டமைப்பது என்பதைப் புரிந்துகொள்ள இணைய வலைதளங்களில் தேடவும் அனுமதிக்கலாம்)
- சாய்வுமானி சுத்தமாகவும் துல்லியமான அளவுகளுடனும் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாணவரிடமும் பணிப்புத்தகத்தை கொடுங்கள். கஷ்டப்படும் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கையேடுகளைப் பார்க்கலாம்.
பகுதி – 2 – சாய்வுமானி யைப் பயன்படுத்தி கட்டிடத்தின் உயரத்தை மாணவர்கள் கணக்கிடுகின்றனர்
- பிராஜெக்டை(Project) சரியான நேரத்திற்குள் முடிப்பதற்காக குழுவில் உள்ள உறுப்பினர்களிடையே வேலையை சமமாகப் பிரித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி ஊக்குவியுங்கள்.
- குழுவின் உறுப்பினர்களுக்குள் பல்வேறு பணிகளை மாணவர்கள் பங்கிட்டுக் கொள்ளட்டும். சாய்வுமானியைப் பயன்படுத்தி பல்வேறு கட்டமைப்புகளின் உயரத்தை அளப்பது ஒருவரின் பொறுப்பு. ஒருவர் அளக்கும்போது மற்றொரு நபர் அந்த உயரங்களைப் பதிவு செய்வது மற்றொருவரின் பணி என எல்லாரும் பணியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
- உயரத்தைக் கணக்கிட முக்கோணவியல் விகிதங்களைப் பயன்படுத்துவதில் உதவி தேவைப்படும் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டைப் பார்க்கலாம்.
- கோணங்களும் தூரங்களும் அளக்கப்பட்ட பின்னர், குழுக்கள் ஒன்றுகூடி தங்களுடைய வேலையை ஒருங்கிணைத்து தங்களுடைய பணித்தாள்களை நிரப்புகிறார்கள். ஒரு சாய்வுமானியைப் பயன்படுத்தி எப்படி ஏற்றத்தின் கோணத்தை அளவிடுவது என்றும் பொருட்களின் உயரங்களை எப்படி மதிப்படுவது என்ற திரிகோணவியலையும் இவை தெளிவாகக் காட்டும்.
- அளவிடப்படும் கட்டமைப்புகளின் படம் (புகைப்படம் அல்லது வரையப்பட்ட படம்) இந்த பணித்தாளில் இணைக்கப்பட வேண்டும்.
பகுதி – 3 – பரிசோதனையும் மறு-பொறியியலாக்கமும்
- கட்டிடத்தின் தோராய உயரத்தைக் கணக்கிட மாணவர்கள் மற்றொரு முறையையும் பயன்படுத்துகின்றனர், தங்களுடைய கருவி மற்றும் அளவுகளின் துல்லியத்தைப் பரிசோதிக்க கணக்கிடப்பட்ட உயரத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். பெரிய தவறு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த சாய்வுமானிகளை அக்குழு மறுவடிவமைப்புச் செய்து பரிசோதனையை துல்லியமாக மீண்டும் செய்கின்றனர்.
- மாணவர்கள் தங்கள் கருத்துக்களைத் தொகுத்து, கட்டிடத்தின் உயரத்தை அளக்க ஒரு மாற்று முறையைக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் சில குறிப்புகளையும் ஆலோசனைகளையும் கொடுத்து வழிகாட்டலாம் அல்லது அவர்கள் தங்களுடைய கையேடுகளைப் பார்க்கலாம்.
- உரிய துறையிடமிருந்து கட்டிடத்தின் உண்மையான உயரத்தை ஆசிரியர் கண்டறிந்து குழுக்களின் அளவுகளை மதிப்பிடலாம்.
பகுதி – 4 - முடிவுகளைத் தொகுத்து தங்களுடைய போஸ்டர்களை பிரசன்ட் (Posters – Presenting) செய்தல்
- மாணவர்கள் தங்களுடைய முடிவுகளை ஒருங்கிணைத்து ஒரு போஸ்டர்(Poster) வடிவில் விளம்பரப் பதாகையை வைப்பதற்கான செயல் திட்டத்தை முன்வைக்கச் செய்யுங்கள். போஸ்டரில் இருக்க வேண்டியவை:
- வடிவமைக்கப்பட்ட சாய்வுமானி
- உயரத்தைக் கண்டறிய பயன்படுத்தப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட சமன்பாடுகள்
- சூழலின் படங்கள் (புகைப்படம் அல்லது விளக்கப்படம்)
- தங்களுடைய பிராஜெக்டில்(Project) கொடுக்கப்பட்ட கருத்துருவை எப்படி இணைத்தனர் என்பதற்கான விளக்கம்
- அவர்கள் கட்டமைக்க உள்ள விளம்பரப் பதாகையின் நிலையையும் கோணத்தையும் (தங்களுடைய பள்ளிக் கட்டிடத்தோடு தொடர்பு படுத்தி) விளக்கப்படங்களுடன் குறிப்பிடுங்கள்.
- மாணவர்கள் தங்கள் போஸ்டர்களை வழங்குகின்றனர்
- ஆசிரியரால் வழிநடத்தப்படும் ஒரு திறந்த கேள்வி பதில் அமர்வை நடத்துங்கள்
- நிறைவு செய்ய, பணிப் புத்தகத்தில் இறுதிக் கேள்விகளை மாணவர்கள் நிரப்பும்படி செய்யுங்கள்.
ஒட்டுமொத்த வடிவமைப்பு செயல்முறை பற்றி சிந்தித்துப் பார்க்கும்படியும் கூறி இந்தச் செயல்பாட்டை நிறைவு செய்யுங்கள். K-W-H-L-ன் L செங்குத்து வரியை மாணவர்கள் நிரப்பும்படி கூறுங்கள்