செய்முறை வடிவமைப்பு / STEM அடிப்படையிலான செயல்திட்டம்
அறிமுகம்
தொடக்கமாக, மாணவர்களுக்கு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பொறியியல் கீழ் வரும் உருள் வண்டி பற்றிய அறிமுகத்துக்கு இந்த வீடியோக்களை காண்பிக்கவும்.
https://www.youtube.com/watch?v=4f1bND-MhuY
https://www.youtube.com/watch?v=LrRdKmjhOgw
பகுதி 1 – மாணவர்கள் உருள் வண்டியை பற்றி அறிந்து கொண்டு, ஒரு உருள் வண்டியை அவர்களாகவே உருவாக்குவார்கள்.
ஒரு உருள் வண்டியின் பல்வேறு பாகங்களை வடிவமைத்தல் குறித்த வீடியோக்களை மாணவர்களை பார்க்க சொல்லவும்.
https://www.youtube.com/watch?v=4lnWb64z2jw
https://www.youtube.com/watch?v=8SO9NTQ1Q6Q
https://www.youtube.com/watch?v=aPgfYpd6UCc
https://www.youtube.com/watch?v=9aP2FQoRxho
சில அல்லது அனைத்து வீடியோக்களையும் பார்த்த பின், அவர்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பொறியியலாளர் குழுவினர் என்றும், அவர்கள் நகரத்தின் ஒரு கேளிக்கை பூங்காவிற்கு ஒரு உருள் வண்டியை வடிவமைத்து, உருவாக்க பணிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறவும். தொடக்கமாக, மாணவர்கள், ஒரு காகித கோலி உருள் வண்டி மாதிரியை வடிவமைத்து, ஒரு கோலியை உருள் வண்டி பாதை முழுவதும் நகர்த்த தேவையான நிலை ஆற்றல் உள்ளதா என்று உறுதிபடுத்தி கொள்வார்கள்.
- மாணவர்கள் அவர்களுடைய குழுவினருடன் அமர்ந்து, யோசனைகளை கருத்து உதிப்பு விவாதம் செய்து, மாதிரி படங்கள் வரைந்து, உருள் வண்டியின் இறுதி மாதிரி வடிவத்தை தேர்வு செய்யட்டும். வடிவமைக்கும் குழுவுக்கும் ஒரு பெயரை தேர்ந்தெடுக்க சொல்லவும்.
- வலிமை, நீளம், உயரம், உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, வடிவமைப்பதற்கு நேரம் ஒதுக்கவும். அவர்களுடைய பணிக்கு எந்த அளவு பொருட்கள் தேவைப்படும் (அவர்களிடம் உள்ள பொருட்கள்), தடைகள், கொடுக்கப்பட்டதிலிருந்து அதிகபட்ச பயனை பெற என்ன செய்ய வேண்டும், போன்ற விஷயங்களை சிந்தனை செய்ய வழிகாட்டுங்கள்!
- அவர்கள் உருவாக்க வடிமைத்தலை செய்ய தொடங்கும் முன், அவர்களை அழைத்து, பின்வரும் விதிமுறைகளை விவாதிக்கவும்:
- உருள் வண்டிக்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் சார்ட் பேப்பர்கள் மற்றும் ஸெல்லோஃபென் டேப் மட்டும் தான்.
- கோலிகளை உருள் வண்டி பாதையில் நகர்த்தும் திறன்மற்றும் அது அடையும் திசை வேகத்தை கொண்டே அவர்களுடைய உருள் வண்டி மதிப்பிடப்படும். ஒவ்வொரு குழுவின் உருள் வண்டியின் நீடித்திருக்கும் திறன் சோதனை செய்யப்படும். தவறினால், மீண்டும் வடிவமைக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு எந்த தருணத்திலாவது உதவி தேவைப்பட்டால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கையேட்டை பார்த்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு மாணவனும் அவரவர்களுடைய செய்பணி புத்தகத்தில், வடிவமைப்பு முறைகளை குறிப்பிட வேண்டும்.
பகுதி – 2 – உருள் வண்டியை உருவாக்குதல்
- நேரத்தில் பணியை முடிக்க, ஒவ்வொரு குழுவையும் தங்கள் உறுப்பினர்களிடையே பணியை சமமாக பங்கிட்டு கொள்ள அறிவுறுத்தி ஊக்குவிக்கவும்.
- உதவி தேவைப்படும் மாணவர்கள் மற்றும் குழுவினருக்கு, ஆசிரியர்கள் தங்களிடம் இருக்கும் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
- உருள் வண்டியை உருவாக்கும் போது, அவர்கள் உயரம் மற்றும் உருள் வண்டியின் கட்டமைப்பு வகைகள், மற்றும் கோலிகள் எவ்வளவு திசைவேகத்தை அடையும் போன்ற அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். (ஆசிரியர்கள் கேள்விகளை தொடர்ந்து கேட்டு அவர்களின் கற்பனை திறனை தூண்டிவிடலாம்)
- கத்திரிக்கோலை ஜாக்கிரதையாக கையாள அறிவுறுத்தவும்.
பகுதி – 3 – உருள் வண்டி சோதனை மற்றும் மறுவடிவமைப்பு
- ஒரு சுவாரசியமான பெயர் மற்றும் விவரங்களுடன், தங்கள் மாதிரி வடிவங்களை விளக்குவதற்கு மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கவும்.
- குறிப்பிட்ட நேரம் மற்றும் ஒவ்வொரு மாணவரின் பங்கு குறித்து மாணவர்களை நெறிபடுத்தவும்.
- கோலியின் திசைவேகத்தை அளவிட்டு, மாணவர்களை தங்கள் உருள் வண்டியை சோதனை செய்ய சொல்லவும்.
- மாணவர்கள் செய்பணி புத்தகத்தில் உள்ள குறிப்புகளை பின்பற்றி கோலியின் திசைவேகத்தை கண்டறிவார்கள்.
- தடையில்லா ஓட்டத்துக்கு கோலியின் பாதையை சீராக இருக்க செய்ய வேண்டும். ஓட்டம் சீராக இல்லையெனில், மாணவர்கள் மீண்டும் சிந்தித்து, உருள் வண்டியை மறுவடிவம் செய்வார்கள். பிறகு, மறுபடியும் கோலியின் திசைவேகத்தை கணக்கிடுவார்கள்.
- மாணவர்கள் கோலியின் திசைவேகத்தை, குறைந்தபட்சம் 3 முறையாவது அளக்க வேண்டும்.
- ஒரு கேள்வி-பதில் சுற்றை ஆசிரியர் முன்னின்று நடத்த வேண்டும்.
- மாணவர்கள் சில உருள் வண்டிகள் ஏன் மற்றவற்றை விட மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்பது குறித்து தொலை நீடாய்வு செய்ய வேண்டும்.
- எந்த காரணிகளை கொண்டு ஒரு உருள் வண்டியின் வலிமை அல்லது பலவீனம் தீர்மானிக்கப்படுகிறது?
- கட்டுமான பொருட்களில் உள்ளார்ந்த குறைபாடுகள் எவை? அந்த குறைபாடுகள் எப்படி சமாளிக்கப்பட்டன?
- நிறைவாக, செய்பணி புத்தகத்தில் உள்ள சுருக்கமான கேள்விகளுக்கு மாணவர்களை பதிலளிக்க சொல்லவும்.